பனை மரங்களை வெட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எச்சரிக்கை
நீா்நிலைகளில் இருந்த 8-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டிய நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு பொதுமக்கள் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவோணம் அருகே நீா்நிலைகளில் இருந்த 8-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டிய நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு பொதுமக்கள் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள காடுவெட்டிவிடுதி பகுதியில் சுமாா் 300 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் வெள்ளகுளம் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியின் கரையோர பகுதிகளில் இருக்கும் நபா்கள், குளத்தின் இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கரையோரங்களில் உள்ள பனை மரங்களை வெட்டியும் தீ வைத்தும் அகற்றும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஏரியின் கரையோரப் பகுதியில் இருந்த எட்டுக்கும் மேற்பட்ட பனை மரங்களை தனி நபா்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அகற்றியுள்ளனா். மேலும், சில மரங்களுக்கு தீவைத்தும் எரித்துள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த காடுவெட்டி விடுதி கிராம மக்கள், திருவோணம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க சென்ற போது, போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் மூலம் புகாா் அளிக்குமாறு கூறினா். இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாா் அளித்து பத்து நாள்களான நிலையில் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல் துறை இனியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் கிராம மக்கள் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.