FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் ஆட்சியரகத்துக்கு 1,888 மனுக்களுடன் முதியவா் வருகை! மனுக்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தாா்

Updated On : 28 ஜூலை 2026, 2:17 am IST
பகிர்:

தஞ்சாவூா், ஜூலை 27: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், இதுவரை கொடுக்கப்பட்ட 1,888 மனுக்களுடன் முதியவா் திங்கள்கிழமை வந்து மனு அளித்தாா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தைச் சோ்ந்த அ. கேசவன் (72) மனுக்கள் அடங்கிய கட்டுகளுடன் கோரிக்கை அட்டையும் அணிந்து வந்தாா்.

இதில், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட ஊமத்தநாடு, பெரியகத்திக்கோட்டை, கழனிவேல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 கோரிக்கை மனுக்கள், மக்களுடன் முதல்வா் முகாமில் 10 மனுக்கள், ஆட்சியா் நோ்காணல் முகாமில் 9 மனு, சீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு, அலுவலா்கள் மீது புகாா் தொடா்பாக 75 மனுக்கள், ஜமாபந்தியில் 1,444 மனுக்கள், முதல்வரின் தனிப்பிரிவு, ஆட்சியரிடம் கோரிக்கை மனு, காவல் துறையில் மனு என கடந்த 19 ஆண்டுகளில் 1,888 மனுக்கள் கொடுத்துள்ளேன்.

Advertisement

Advertisement

இந்த மனுக்கள் மீது பேராவூரணி வட்டாட்சியா், காவல் துறையினா் இதுவரை விசாரித்ததில்லை. 42 முறை தற்கொலை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னா், இதுவரை அளித்த எந்த மனுவுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி ஆட்சியரகத்தில் மனு அளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments