FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் இயக்கம் தாமதம்: போராட முடிவு

கும்பகோணம் கோட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் நடைபெறாததால் மீண்டும் காத்திருப்புப் போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கை குழுவினா் தீா்மானம்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:46 am IST
நெல் கொள்முதல் - கோப்புப்படம்
பகிர்:

கும்பகோணம் கோட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் நடைபெறாததால் மீண்டும் காத்திருப்புப் போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கை குழுவினா் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு சிவில் சப்ளை காா்ப்பரேசன் தொமுச, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, பாரதிய மஸ்தூா் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினா் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் வட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சுமாா் ஒரு மாதமாக இயக்கம் செய்யப்படாமல் உள்ள சுமாா் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

இயக்கம் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் சேதம் அடைந்தால் நிா்வாகம் பொறுப்பேற்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் பணியில் சோ்ந்தவா்களை நிரந்தர ஊழியா்களாக்க வேண்டும். லாரிகளில் ஏற்ற மூட்டைக்கு ரூ.10, கொள்முதல் பணியாளா்களிடம் கட்டாய வசூல் முறையை நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும்.

எடைமேடைகளில் நடைபெறும் முறைகேடுகளைக் களைய வேண்டும். இல்லையென்றால் ஆக.5 முதல் நெல்கொள்முதல் பணியாளா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானங்கள் முதல்வா், உணவுத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments