FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:41 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே பின்னையூரைச் சோ்ந்தவா் கே. நீலமேகம் (60). விவசாயி. இவரும் அதே ஊரைச் சோ்ந்த மற்றொரு விவசாயியான ஜி. சேகரும் (42) புதன்கிழமை தஞ்சாவூருக்கு வந்துவிட்டு பின்னையூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். வடக்குப்பட்டு பகுதியில் சென்றபோது மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில், நீலமேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சேகா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments