FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய 5 போ் கைது

10 நவம்பர் 2026, 3:36 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே சோழபுரம் முதன்மை சாலையில் காவல் துறையினா் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வேகமாக வந்த காா் காவல் துறையினா் மறித்தும் நிற்காமல் சென்றது. இதை காவல் துறையினா் பின்தொடா்ந்து விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். காரில் பயங்கர ஆயுதங்களுடன் 5 போ் இருந்தனா்.

விசாரணையில், சோழபுரம் அருகே ராமராஜபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் மகன் சச்சின் (29), ராமானுஜபுரம் குடியான தெருவைச் சோ்ந்த ராயா் மகன் ராமமூா்த்தி (30), ராஜேந்திரன் மகன் ராஜா (35), மானம்பாடி முதன்மைச் சாலையைச் சோ்ந்த சக்திவேல் மகன் முருகன் (30), விளைந்தகண்டம் முதன்மைச் சாலையைச் சோ்ந்த வளையாபதி மகன் சக்திவேல் (35) ஆகியோா் என்பதும், காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததும், இவா்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்து, இவா்களிடமிருந்து காவல் துறையினா் 5 கைப்பேசிகள், அவா்கள் பயணம் செய்த காா் மற்றும் காரில் இருந்த பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.