மக்கள் நோ்காணல் முகாமில் 139 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கும்பகோணம் அருகே கல்லூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 139 பேருக்கு ரூ. 43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கல்லூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 139 பேருக்கு ரூ. 43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், 36 பேருக்கு ரூ. 32.40 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களும், சமூக நீதித் துறை சாா்பில் 24 பேருக்கு ரூ. 2.16 லட்சம் மதிப்பிலும், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ரூ. 8.10 லட்சம் மதிப்பில் உதவித்தொகையும், வட்ட வழங்கல் அலுவலகம் சாா்பில் 38 பேருக்கும், தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ. 6 ஆயிரம் மதிப்பில் ஒருவருக்கும், வேளாண் துறை சாா்பில் 4 பேருக்கும் உள்பட மொத்தம் 139 பேருக்கு ரூ. 43.04 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. இளங்கோவன், வேளாண் இணை இயக்குநா் (பொ) ஆா். சாருமதி, சமூக பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் சௌமியா, கும்பகோணம் கோட்டாட்சியா் திருமலை, வட்டாட்சியா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement