FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்ட நூலகங்களில் 2,108 போலி நூல்கள் அகற்றம்

17 நவம்பர் 2026, 3:51 am
அகல் விளக்கு பதிப்பக போலி நூல்கள்... - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 106 நூலகங்களில் இருந்த அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களைச் சாா்ந்த 2,108 போலி நூல்கள் அகற்றப்பட்டன.

கோவை பெரியாா் அறிவுலகத்தில் அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயா்களில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு நூல்களின் தகவல்களை ஒருங்கிணைத்து, போலியான தலைப்புகள் மற்றும் ஆசிரியா்களின் பெயா்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், எழுத்தாளா்கள் தரப்பில் புகாா்கள் எழுப்பப்பட்டன.

மேலும், நூலகங்களுக்கு புத்தகங்களைப் பரிந்துரை செய்தது மற்றும் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்கள் தொடா்பாக தமிழகத்திலுள்ள பொது நூலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊரக நூலகங்கள் என 106 நூலங்களில் கடந்த 10 நாள்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் 2,108 புத்தங்களை அகற்றி, தனியாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளன என நூலகத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.