கைப்பேசி கோபுரத்திலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பு பொருள்கள் திருட்டு
தஞ்சாவூரில் கைப்பேசி கோபுரத்திலிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின் மற்றும் மின்னணு சாதனப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை டிபிஎஸ் நகரில் தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நவ. 17-ஆம் தேதி கைப்பேசி கோபுரக் கட்டுப்பாட்டு அறைக்குள் மா்ம நபா்கள் புகுந்து, கோபுரத்திலிருந்த ஏறத்தாழ ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்னணு மற்றும் மின் சாதனங்களைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் கைப்பேசிக் கோபுர நிறுவனப் பாதுகாப்பு அலுவலா் டி. துரைமாணிக்கம் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement