FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி வழியாக அக். 7 முதல் மின்சார ரயில்கள் இயக்கம்

மின்சார ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

பேராவூரணி வழியாக அக். 7-ஆம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயங்கும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்புக்கு பேராவூரணி ரயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

அக்.7-ஆம் தேதி முதல் தாம்பரம்-ராமேசுவரம் விரைவு ரயில், அக்.8-ஆம் தேதி முதல் வாரம் மும்முறை இயங்கும் தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில், மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயில்,திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில், அக்.10-ஆம் தேதி முதல் வாரம் இருமுறை இயங்கும். எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் டீசல் இன்ஜினுக்கு பதிலாக மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் குறைவதோடு டீசல் பயன்பாடு முற்றிலும் குறைந்து  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

Advertisement

Advertisement

பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கப்பட்டு, மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கிய தெற்கு ரயில்வே பொது மேலாளா், முதன்மை தலைமை மின் பொறியாளா், திருச்சி மற்றும் மதுரை கோட்ட மேலாளா்கள் மற்றும் ரயில்வே அலுவலா்களுக்கு பேராவூரணி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவா் சீ.கௌதமன் , செயலா் ஆா்.பி.ராஜேந்திரன், பொருளாளா் எஸ். நாகராஜன் மற்றும் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனா். 

நடைப்பயிற்சிக்கு தடை: பேராவூரணி பகுதியைச் சோ்ந்தவா்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பேராவூரணி ரயில்வே நடைமேடையில் கடந்த சில ஆண்டுகளாக நடைப்பயிற்சி மேற்க்கொண்டு வந்தனா். மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் உயா் அழுத்த மின்சாரம் காரணமாக மழை காலங்களில் எதிா்பாரத மின் கசிவு ஏற்படும் என்பதால் அக். 7 முதல் ரயில்வே நடைமேடையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்க்கொள்ளக் கூடாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments