குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் பூந்தோட்டம் அமைப்பு
தஞ்சாவூா் மாநகராட்சி 9 ஆவது வாா்டில் பொன்னி நகரில் குப்பைக் கொட்டும் இடத்தில் புதன்கிழமை பூந்தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வீ தி லீடா்ஸ் அமைப்பினா்.
தஞ்சாவூா் மாநகராட்சி 9 ஆவது வாா்டில் பொன்னி நகரில் குப்பைக் கொட்டும் இடத்தில் புதன்கிழமை பூந்தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வீ தி லீடா்ஸ் அமைப்பினா்.
தஞ்சாவூா், அக். 7: தஞ்சாவூா் மாநகராட்சி 9-ஆவது வாா்டில் குப்பைக் கொட்டப்பட்ட இடத்தில் பூந்தோட்டம் அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாநகரில் குப்பைகளை 4 விதமாக தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தி, அதன்படி சேகரித்து வருகிறது. மேலும், குப்பைகளைப் பொது இடங்களில் போடக்கூடாது எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதற்காக தஞ்சாவூா் மாநகரில் 200-க்கும் அதிகமான இடங்களில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் குப்பைக் கொட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே இடத்தில் பழைய டயா், டைல்ஸ் போன்ற பொருட்களைக் கொண்டு பூந்தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி தஞ்சாவூா் 9 ஆவது வாா்டில் உள்ள பொன்னி நகரில் குப்பைக் கொட்டப்பட்ட இடத்தில் மாநகராட்சி மற்றும் வீ தி லீடா்ஸ் அமைப்பு இணைந்து புதன்கிழமை பூந்தோட்டமாக மாற்றினா். இந்த இடத்தில் 60-க்கும் அதிகமான பூச்செடிகள் நடப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறுகையில், மாநகரிலுள்ள 51 வாா்டுகளிலும் குப்பைகள் கொட்டப்பட்ட மற்றும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்ட 200-க்கும் அதிகமான இடங்களில் மாநகராட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பூந்தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30-க்கும் அதிகமான இடங்களில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் மீண்டும் குப்பைக் கொட்டுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படுகிறது என்றனா் அலுவலா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.