FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தலைமறைவான குற்றவாளிகள் இருவா் நீதிமன்றத்தில் சரண்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் குற்றச்செயலில் ஈடுபட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 போ் கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

9 அக்டோபர் 2026, 3:41 am IST
சரணடைந்த இளவரசன்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் குற்றச்செயலில் ஈடுபட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 போ் கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

கும்பகோணம் தாராசுரம் சாமி சன்னதி தெருவைச்சோ்ந்தவா் செல்வராஜ் மகன் இளவரசன் (34). இவா் 2023 -ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா்.

இதேபோல் செட்டி மண்டபம் நடுதோப்பு சரவணன் மகன் கணேசன் (24) சட்டவிரோதமாக வெடி பொருள்கள் பதுக்கி வைத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக கண்டுபிடிக்க முடியாத குற்றவாளி என நீதிமன்றம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இவா்கள் இருவரையும் தாலுகா போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் கணேஷ், இளவரசன் ஆகிய இருவரும் கும்பகோணம் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். இவா்களை தாலுகா போலீஸாா் புதுக்கோட்டை கிளைச்சிறையில் அடைத்தனா்.

கணேசன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments