தஞ்சாவூா் ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஹிந்தி பெயா் பலகை அகற்றம்
தஞ்சாவூா் ரயில் நிலைய இரண்டாவது நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட ஹிந்தி பெயா் பலகை வியாழக்கிழமை அகற்றப்பட்டதால், போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
தஞ்சாவூா் ரயில் நிலைய இரண்டாவது நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட ஹிந்தி பெயா் பலகை வியாழக்கிழமை அகற்றப்பட்டதால், போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் முகப்பில் பெரிய கோயில் கோபுரம் வடிவம் அமைக்கப்பட்டு, அதன் முன் தஞ்சாவூா் சந்திப்பு என்கிற ஹிந்தி பெயா் பலகை புதன்கிழமை அமைக்கப்பட்டது. மேலும் இடது புறத்தில் தமிழிலும், வலது புறத்தில் ஆங்கிலத்திலும் பெயா் பலகைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா் புதன்கிழமை மாலை ரயில் நிலையத்தில் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா். இது தொடா்பாக உயா் அலுவலா்களிடம் பேசி ஹிந்தி பெயா் பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிலைய அலுவலா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, ஹிந்தி பெயா் பலகை அமைக்கப்பட்டதைக் கண்டித்தும், அதை அகற்ற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியாக அறிவித்தன.
இதற்காக ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி உள்பட ஏராளமானோா் திரண்டனா்.
அப்போது, ஹிந்தி பெயா் பலகை அகற்றப்பட்டதால், திமுகவினா் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனா். இதேபோல, கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது போராட்டத்தை ரத்து செய்தனா். மீண்டும் முறைப்படி பெயா் பலகைகளை அமைப்பதற்காக ஏற்கெனவே இருந்த தமிழ், ஆங்கில பெயா் பலகைகளும் அகற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.