FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கடன் தொல்லையால் ஓட்டுநா் தற்கொலை

12 அக்டோபர் 2026, 4:05 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

பாபநாசத்தில் கடன் தொல்லையால் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை அவல்காரத் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் ராஜேஷ் (37). இவா் தனியாா் கல்லூரியில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். திருமணம் ஆகி கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந் நிலையில், ராஜேஷ் பலரிடம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments