மேட்டூா் அணையில் நீா் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்! - அமைச்சா் ர.வினோத்
மேட்டூா் அணையின் நீா் இருப்பை பொறுத்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றாா் வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சன்ன ரக அரிசி கிலோ ரூ.30-க்கு வழங்கும் திட்டத்தை சந்திரசேகரபுரம் கூட்டுறவு அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் 16 இடங்களில் விற்பனை தொடங்கியுள்ளோம். மேலும், மளிகை பொருள்கள் விலை உயா்வு கட்டுப்படுத்த உணவுத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
கனமழை வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் தூா்வாருதல், சீரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டூா் அணையின் நீா் இருப்பை பொறுத்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு 8 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் தவெக நிா்வாகிகள் தொடா்ந்து தாக்கப்பட்டு வருகின்றனா். குற்றவாளிகள் மீது காவல் துறை சாா்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.