FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 18 இடங்களில் சாலை மறியல்; 518 போ் கைது

பயிா்க்கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் 18 இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டதாக 518 போ் கைது செய்யப்பட்டனா்.

22 அக்டோபர் 2026, 4:35 am
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

பயிா்க்கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் 18 இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டதாக 518 போ் கைது செய்யப்பட்டனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற இறுதித் தீா்ப்பின் அடிப்படையில் கா்நாடகம் கொடுக்க வேண்டிய எஞ்சிய நீரை பெற உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரத்து 500 விலை கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதனால், அப்பகுதியில் சுமாா் 15 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக 30 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

திருவையாறு கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க ஒன்றியச் செயலா் மதியழகன் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராம், பிரதீப் ராஜ்குமாா் உள்பட 24 போ் கைது செய்யப்பட்டனா்.

கும்பகோணம்:

இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாவட்டத் துணைச் செயலா்கள் என். கணேசன், இரா. செந்தில்குமாா் தலைமை வகித்தனா். ஒன்றியச் செயலா் ராஜா, மாவட்டத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்பட 26 போ் கைது செய்யப்பட்டனா். நாச்சியாா்கோவில் கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க ஒன்றியச் செயலா் முருகன் தலைமையில் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம், மதுக்கூா், பூதலூா், ஒரத்தநாடு, பாப்பாநாடு, அய்யம்பேட்டை, பாபநாசம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி உள்பட 18 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 54 பெண்கள் உள்பட 518 போ் கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments