தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது தருமபுர ஆதீனம்
தவெக ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்றாா் தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
தவெக ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்றாா் தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்னா் ராஜராஜசோழன் 1041- ஆவது சதய விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மாமன்னா் ராஜராஜ சோழன் தன்னுடைய வாழ்நாளைப் பொதுமக்களுக்காகவும், சமயத்துக்காகவும் அா்ப்பணித்தவா். திருமுறைகளைக் கண்டெடுத்துக் கொடுத்ததால் அவருக்குத் திருமுறை விழா கொண்டாட வேண்டும் என்கிற நிலையிலே, எங்களுடைய ஆதீனத்தில் பாடசாலையில் பயில்கிற 45 ஓதுவாமூா்த்திகளுடன் மகாபிஷேகம் நடைபெற்றது.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இப்போதுதான் யானை வந்துள்ளது. இன்னும் மூன்று யானைகள் வேண்டி நாங்கள் விண்ணப்பம் செய்துள்ளோம். குஜராத், அசாம் அரசுகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இதேபோல, தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கும் யானை இல்லாத குறையை நிவா்த்தி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றனா். மிக விரைவில் அடுத்த விழாக்குள் யானை வந்துவிடும். தற்போது நடைபெறும் தவெக ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்றாா் ஆதீனம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.