FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழகத்தில் இனி நூறு ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான்! மதுரை ஆதீனம் பேட்டி

தமிழகத்தில் இனி நூறு ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் என மதுரை ஆதீனம் பேட்டியளித்தள்ளார்.

17 செப்டம்பர் 2026, 3:02 pm IST
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்
பகிர்:

தமிழ்நாட்டில் இனி நூறு ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் நடைபெறும், ஆட்சி சிறப்பாக உள்ளது என்று மதுரை ஆதீனம் காஞ்சிபுரத்தில் கூறியுள்ளார்.

தவெக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது, நூறாண்டு காலம் தவெக ஆட்சி செய்யும் என்று மதுரை ஆதீனம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 ஆண்டு காலம் வாழ்ந்த காஞ்சிபுரம் பகுதியில் இன்று கும்பாபிஷேகம் என்பதால் மதுரை செல்லாமல் இங்கு வந்ததாகவும், அறநிலைத் துறை செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என மதுரை ஆதீனம் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.

Advertisement

Advertisement

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ விஸ்வநாத ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

இதில் ஸ்ரீ மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினார். அதன்பின் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் அளித்து, ஆசீர்வாதம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஆதீனம், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருந்ததால் இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இன்று மதுரை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாமல் இங்கு வந்து கலந்து கொண்டேன் எனவும், பக்தர்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் நடைபெற்றது என தெரிவித்தார்.

தவெக ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும் லஞ்சம் கொடுக்க வேண்டாம், கேட்டால் என் பெயரை சொல்லுங்கள் என அறிவித்த முதல்வரின் ஆட்சி சிறப்பாக உள்ளது. 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் ரமேஷின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சியைப் பார்த்திருக்கிறேன், ஆனால் காமராஜர் ஆட்சி போல் தற்போது விஜய் ஆட்சி உள்ளது. முதல்வர் உடன் திரிஷா லண்டன் சென்றுள்ளது குறித்து கேட்டபோது, அது அவரின் தனிப்பட்ட விஷயம் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments