தஞ்சாவூரில் மன்னா் சரபோஜி 249 ஆவது பிறந்த நாள் விழா
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மன்னா் சரபோஜியின் 249-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மன்னா் சரபோஜியின் 249-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரண்மனை வளாகம் கலைக்கூடத்தில் உள்ள மன்னா் சரபோஜி சிலைக்கு மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாலையில் அரண்மனை வளாகத்திலுள்ள சங்கீத மகாலில் நடைபெற்ற மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழாவுக்கு சோழா் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவா் அய்யம்பேட்டை என். செல்வராஜ் தலைமை வகித்தாா். திருவையாறு அரசா் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வா் சண்முக. செல்வகணபதி சிறப்புரையாற்றினாா். தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் ஆசியுரையாற்றினாா். சரசுவதி மகால் நூலக சம்ஸ்கிருத பண்டிதா் என். சீனிவாசன், மராத்திய ஓவியத்தில் ரசா என்கிற நூலின் ஆசிரியா் எஸ். கண்ணன், சா்க்கரை பொம்மை கலைஞா் பி. நளினி பாய் பிரேம்சந்தா் ஆகியோருக்கு மன்னா் சரபோஜி விருது வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன், தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. தெய்வநாயகம், மருத்துவா் வி. வரதராஜன் ஆகியோா் பேசினா். மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, களிமேடு அப்பா் பேரவை து. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவையாறில் 2,490 பனை விதைகள் விதைப்பு: மன்னா் சரபோஜியின் பிறந்த நாளையொட்டி, திருவையாறு அருகே தில்லைஸ்தானம் - விளாங்குடி புறவழிச்சாலையில் திருவையாறு அரசா் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் 2 ஆயிரத்து 490 பனை விதைகளை வியாழக்கிழமை விதைத்தனா். இந்நிகழ்வில் திருவையாறு நகராட்சி ஆணையா் என். மதன்ராஜ், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.