FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தம்பதியை ஏமாற்றி 8 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற பெல் ஊழியர், அவரது மனைவியை ஏமாற்றி 8 பவுன்  நகையை திருடிச் சென்றவரை போலீஸார் தேடுகின்றனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:38 am IST
பகிர்:

ஓய்வுபெற்ற பெல் ஊழியர், அவரது மனைவியை ஏமாற்றி 8 பவுன்  நகையை திருடிச் சென்றவரை போலீஸார் தேடுகின்றனர்.
திருச்சி, காட்டூர் விக்னேஷ் நகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (63), ஓய்வு பெற்ற பெல் ஊழியர். இவரது மனைவி கங்கையம்மாள் (60).  காளிமுத்து  செவ்வாய்க்கிழமை காலை வீட்டருகே வெளியே நின்றிருந்தார். அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை மின்வாரிய அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு,  மின் விநியோகம் குறித்து விசாரித்துள்ளார்.
அவரை நம்பிய காளிமுத்து அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அப்போது, காளிமுத்துவின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு, கங்கையம்மாளிடம் இருந்த 8 சவரன் சங்கிலியை வாங்கிக்கொண்டு அவர் நழுவிச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த  கங்கையம்மாள் ஏமாந்த விவரத்தை கணவரிடம் கூறினார். இருவரும் வெளியே வந்து தேடிப் பார்த்தபோது அவர் இல்லை. புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments