FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 5 பேர் காயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே புதன்கிழமை அதிகாலை தனியார் சொகுசு பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே புதன்கிழமை அதிகாலை தனியார் சொகுசு பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக பொள்ளாச்சிக்கு தனியார் சொகுசு பேருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தை தேனியைச் சேர்ந்த ஸ்டாலின்(28) ஓட்டி வந்தார். பேருந்து புதன்கிழமை விடியற்காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியை அடுத்த துலுக்கம்பட்டி பிரிவு வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உரிய சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments