மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 1-ஆம் தேதி முதல் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 1-ஆம் தேதி முதல் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் பி. சிவக்குமார் கூறியிருப்பது: தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையம் நவம்பர் மாதம் நடத்தவுள்ள தொகுதி 2-க்கான தேர்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில், மாவட்ட மைய நூலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கி தொடர்ந்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம். எனவே இந்த வாய்ப்பை தேர்வெழுதவுள்ளோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.