மேம்படுத்தப்படும் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்
திருச்சியில் மேம்படுத்தப்படும் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா முதன்மையானதாக மாற்றி அமைக்கப்படவுள்ளது என அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தார்.
திருச்சியில் மேம்படுத்தப்படும் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா முதன்மையானதாக மாற்றி அமைக்கப்படவுள்ளது என அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் பழைய வளாகத்தில் உள்ள குழந்தைகள் போக்குவரத்துப் பூங்காவை தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து ரூ. 1.25 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது. அது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மேலும் பேசியது: இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் தான் முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழகமும் அதில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய மாவட்டமாக திருச்சி மாவட்டமும் அமைந்துள்ளது. இன்று அடிக்கல் நாட்டப்படுகிற போக்குவரத்து பூங்காவானது சிறுவர்கள் முதல் அனைவரும் போக்குவரத்து விதிகள் கற்றுத்தருவதற்காக அமைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை மேம்படுத்தி இந்தியாவில் பூங்காக்களில் முதன்மையான குழந்தைகள் போக்குவரத்து பூங்காவாக மாற்றப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மக்களவை உறுப்பினரும் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான ப. குமார், மாநகர காவல் ஆணையர்அ.அமல்ராஜ், துணை ஆணையர்கள் (சட்டம் ஒழுங்கு) என்.எஸ்.நிஷா, (குற்றம் மற்றும் போக்குவரத்து) ஏ. மயில்வாகணன், மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.