டேபிள் டென்னிஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
திருச்சி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி நாயுடு மகாஜன சங்கம், மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி கழகம் இணைந்து மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் போட்டிகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியில் நடத்தின.
இதில், மினிகேடட், கேடட் பிரிவு, சப் ஜூனியர், இளையோர் என 4 பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.
இதில், ஆத்மிகா, கேஷவ், நேத்ரா, அனுரமா, நிலாஷ், தீபேஷ் விக்ரம், ஆன்டோனியஸ் ஜெய்ரஸ் ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர். ஐஸ்வர்யா, அஷ்வத், பிரஷன்னா, கேஷவ், துர்கா, ராம்குமார், நேத்ரா, பார்த்தசாரதி ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். இளையோர் பிரிவில் வெங்கடேஷ் முதலிடமும், கௌஸிக் இரண்டாமிடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் சூரஜ், வெங்கடேஷ் ஜோடி முதலிடம் பிடித்தது. தினகரன், அனுரமா ஜோடி இரண்டாமிடம் பிடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சூரஸ் முதலிடம், தினகரன் இரண்டாமிடம் பிடித்தனர். பதக்கம் பெறாதோருக்கான போட்டியில் தினகரன் முதலிடம், நிலாஷ் இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, கே.ஆர்.டி நிறுவனர் கே.ரெங்கராஜன், சங்கச் செயலர் ஆர்.ஜெயராமன் ஆகியோர்பரிசுகள் வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.