திருவெறும்பூரில் பயன்பாட்டுக்கு வந்த திட்டப் பணிகள்
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவெறும்பூர் வடக்கு ஒன்றியப் பகுதியில் முடிக்கப்பட்ட பணிகள் ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவெறும்பூர் வடக்கு ஒன்றியப் பகுதியில் முடிக்கப்பட்ட பணிகள் ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பத்தாளப்பேட்டை ஊராட்சியில் ரூ.5.98 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், திருநெடுங்களம் ஊராட்சியில் ரூ.5.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய், குவளக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.11.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை
திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.எம்.கருணாநிதி, ஊராட்சி செயலர்கள் குவளக்குடி பிரபா, பத்தாளப்பேட்டை சண்முகம், திருநெடுங்களம் மு.சைவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.