உப்பிலியபுரம், எரகுடி மையங்களில் மானிய விலையில் நெல்விதை
உப்பிலியபுரம், எரகுடி வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பதற்காக போதிய அளவில்
உப்பிலியபுரம், எரகுடி வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பதற்காக போதிய அளவில் புதிய டிகேஎம் 13 ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியது:
உப்பிலியபுரம் பகுதி விவசாயிகள் சம்பா பருவத்தில் பிபிடி5204 என்ற ஆந்திரா பொன்னி நெல்லை சாகுபடி செய்கின்றனர். இந்த ரக நெல்லை விட 10 நாள் குறைவாக 125 முதல் 130 நாள்களில் அறுவடைக்கு தயாராகக் கூடியதும், பல்வேறு பூச்சி, நோய்களை தாக்குப்பிடித்து வளரும் திறனுடைய டிகேஎம் 13 நெல் ரகமானது சன்ன ரக அரிசி வகையைச் சார்ந்தது.
இது 75.5 சதவீத அரவைத் திறனும், 71.7 சதவீதம் முழு அரிசி காணும் திறன் கொண்டதாகும். இந்த புதிய நெல் ரகத்தை சம்பா, தாளடி பருவத்தில் விவசாயிகள் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். தற்போது உப்பிலியபுரம், எரகுடியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் டிகேஎம் 13 ரக நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பதற்காக போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உப்பிலியபுரம் வட்டார விவசாயிகள் வேளாண்மை மையத்தை அணுகி நெல் விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார் கலைச்செல்வி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.