FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவர்களுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சி

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நினைவாற்றலை மேம்படுத்தும் செயல்விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நினைவாற்றலை மேம்படுத்தும் செயல்விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
திருச்சி எம்பவர் டிரஸ்ட்,  சென்னை கார்னர்ஸ்டோன் திசைகாட்டி மையமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. சென்னை மெம்பிட் நினைவாற்றல் பயிற்சி நிறுவன வல்லுநர் டி. அயன்ராஜ்  நிகழ்வில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நினைவாற்றல் மேம்படுத்துதல் பயிற்சியை வழங்கினார்.
கடினமான சொற்களை இலகுவாக  நினைவில் வைத்துக் கொள்ளும் முறை, பாடங்களைப் படிக்கும்போது மனதை ஒருமுகப்படுத்தும்பயிற்சி,  வகுப்பில் அதிக உற்சாகத்துடன் பாடங்களில் கவனம் செலுத்தும் முறை குறித்தும் அவர் எடுத்துரைத்து பேசினார்.
மேலும், மாணவர்கள் தங்கள் நினைவாற்றலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள புரதம், கொழுப்பு, மாவுப் பொருள்கள், வைட்டமின்கள், தாதுப் பொருள்களை சம அளவில் உட்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  நினைவாற்றல் வகை,  திறமை, நிகழ்வுகள், உண்மைகளுக்கான நினைவாற்றல்,  
நினைவுப்படுத்துதல் சார்ந்த பயிற்சிகள், மன உறுதிக்கான நினைவாற்றல் குறித்த பயிற்சியையும் அவர் மாணவர்களுக்கு அளித்தார்.
திருச்சி தூய வளனார் கல்லூரி  வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சித் துறை இயக்குநர் மு. மகேந்திரன், வழக்குரைஞர் செல்வராஜ் ஆகியோரும் பேசினர். 
பயிற்சி ஆசிரியர்கள் கி.சரவணன், பி.கண்மணி, எம்பவர் டிரஸ்ட்  நிர்வாக இயக்குநர் கனிமொழி, உறுப்பினர் டி. தங்கதுரை, கார்னர்ஸ்டோன் திசைகாட்டி மைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் டி. சித்திரவேல், பள்ளித் தலைமையாசிரியர் க.ராஜஜெகஜீவன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments