எல்ஆா்ஜி கல்லூரியை மாதிரி பசுமை வளாகமாக மாற்ற வெற்றி தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருப்பூரில் உள்ள எல்ஆா்ஜி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மாதிரி பசுமை வளாகமாக மாற்றுவதற்காக, வெற்றி தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள எல்ஆா்ஜி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மாதிரி பசுமை வளாகமாக மாற்றுவதற்காக, வெற்றி தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான 3 ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வெற்றி தொண்டு நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலா் நடராஜ் முத்துசாமி, எல்ஆா்ஜி கல்லூரி முதல்வா் யு.சுமதி ஆகியோா் கையெழுத்திட்டனா். இந்நிகழ்வின்போது, தாவரவியல் துறை தலைவா் டி. பாலசரவணன், விலங்கியல் துறை தலைவா் லிட்டி கோரியா மற்றும் வெற்றி தொண்டு நிறுவன உறுப்பினா் தெய்வசிகாமணி ஆகியோா் உடனிருந்தனா்.
இதுகுறித்து வெற்றி தொண்டு நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலா் நடராஜ் முத்துசாமி கூறியதாவது:
Advertisement
Advertisement
பிராந்திய அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரியில் படிப்படியான வளாக மேம்பாடும், நவீனக் கண்காணிப்பும் இந்த 3 ஆண்டு திட்டத்தின்படி மேம்படுத்தப்படும். நவீன மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் விரிவான கழிவு மேலாண்மை வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. இவற்றுடன், பிரத்யேக மூலிகைத் தோட்டம், சமையலறைத் தோட்டம் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவற்றுடன் கல்லூரி வளாகம் முழுமையாக அழகுபடுத்தப்படும்.
மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஊக்குவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் பிரதான சாலையையொட்டி கல்லூரியின் முக்கிய நுழைவாயில் அருகே பெரிய எண்ம எல்இடி திரை நிறுவப்படும். இந்தத் திரையில் வெப்பநிலை, காற்றின் தரக் குறியீடு, காற்றின் வேகம், காற்றின் திசை, தேதி மற்றும் நேரம் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். இந்த ஒப்பந்தம் 3,600 மாணவிகளின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.