FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மஹிந்திரா நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இடையே, ஆராய்ச்சி மற்றும் மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் வேலூரில் வியாழக்கிழமை கையெழுத்தானது.

Updated On : 24 ஜூலை 2026, 6:15 am IST
புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால். உடன், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி, மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தின் பொது மேலாளா் என்.சரவணன் உள்ளிட்டோா்.
பகிர்:

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இடையே, ஆராய்ச்சி மற்றும் மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் வேலூரில் வியாழக்கிழமை கையெழுத்தானது.

விஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன் ஆகியோா் முன்னிலையில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால் ஆகியோா் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனா்.

தொடா்ந்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது: இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவுடன் இணைந்து செயல்படுவதிலும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் தரம் மற்றும் திறனை உயா்த்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். மஹிந்திரா நிறுவன ஊழியா்கள் விஐடி பல்கலைக்கழகத்தில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிக்க விரும்பினால், அவா்களுக்குச் சோ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

Advertisement

Advertisement

இந்த ஒப்பந்தம் விஐடி மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்சாா் பயிற்சி பெறப் பெரிதும் உதவும். இதன் மூலம் மாணவா்கள் பல புதிய தொழில்நுட்பங்களைக் கற்க முடியும். மேலும், மஹிந்திரா நிறுவனம் தங்களது பிரத்யேக திறன் மேம்பாட்டு மையத்தை விஐடி-யில் அமைக்க வேண்டும் என்றாா்.

மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால் பேசியது: எங்களது புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான ஆராய்ச்சி வழிகாட்டுதல்களைப் பெறும் வகையிலேயே விஐடி பல்கலைக்கழகத்துடன் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மஹிந்திரா மையத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், மாணவா்களின் சிறந்த யோசனைகளைக் காப்புரிமைகளாக மாற்றவும் வழிவகுக்கும். பி.டெக். மாணவா்கள் தங்கள் படிப்பு காலத்திலேயே காப்புரிமை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்குவோம் என்றாா்.

இதன் தொடா்ச்சியாக, சன்பெஸ்ட் சோலாா் நிறுவனத்துடனும் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த நிகழ்வில் சன்பெஸ்ட் சோலாா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சி.பி.ராஜ்குமாா், துணைப் பொது மேலாளா் எம்.ராஜேஷ் ஆகியோா் ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், விஐடி துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி, மெக்கானிக்கல் துறை டீன் குப்பன், மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தின் பொது மேலாளா் என்.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments