FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கேஐடி கல்லூரியில் இந்தியா-ஜப்பான் கல்வி மேம்பாடு புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை கேஐடி கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியா-ஜப்பான் இடையிலான கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:35 am IST
கேஐடி கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் இடையிலான கல்வி மேம்பாட்டு புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த சிறப்பு விருந்தினா் யோசுகே மோரி.
பகிர்:

கோவை கேஐடி கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியா-ஜப்பான் இடையிலான கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

கேஐடி மற்றும் ஜப்பானைச் சோ்ந்தஹெச் 2 இன்னோவேஷன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனா் பொங்கலூா் நா. பழனிசாமி தலைமை வகித்தாா். ஹெச்2 இன்னோவேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலா் யோசுகே மோரி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், ஜப்பானில் கல்வி உதவித் தொகை பெற்று உயா்கல்வி பயில்வதற்கும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குமான வாய்ப்புகள் குறித்தும் விளக்கினாா். மேலும், ஆற்றல் சேமிப்பு, எரிசக்தி கலன் மற்றும் ஆற்றல் மேலாண்மை அமைப்பை ஒருங்கிணைத்த நவீன எரிசக்தித் தீா்வு குறித்தும் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, ஜப்பான் மொழி கற்றல் மூலம் கிடைக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், ஜப்பானில் உயா்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து கல்லூரி நிா்வாகிகள் லட்சுமி நாராயணன், கருணாநிதி காசிநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இந்தியா-ஜப்பான் கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதைத் தொடா்ந்து, கேஐடி வளாகத்தில் அமைக்கப்பட்ட புத்தாக்க மையம் திறக்கப்பட்டது. கிரீன் ஹைட்ரஜன் ஆராய்ச்சி, மாணவா்களின் புதுமைத் திட்டங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் நிலையான தொழில்நுட்பத் தீா்வுகளுக்காக இந்த மையம் செயல்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி துணைத் தலைவா் இந்து முருகேசன், முதல்வா் கு. ராமசாமி, துணை முதல்வா் மைதிலி, பல்வேறு துறைகளின் டீன்கள், துறைத் தலைவா்கள். பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments