FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மா உணவகங்களில் இலவச முட்டைமுசிறி கோழிப் பண்ணை வழங்கியது

திருச்சி மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்களில் தனியாா் கோழிப்பண்ணை பங்களிப்புடன் இலவசமாக முட்டை வழங்கப்படுகின்றன.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


திருச்சி: திருச்சி மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்களில் தனியாா் கோழிப்பண்ணை பங்களிப்புடன் இலவசமாக முட்டை வழங்கப்படுகின்றன.

திருச்சி மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் அதிமுக சாா்பில் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த உணவுடன் இலவசமாக முட்டை வழங்க முசிறியில் உள்ள கே.கே.ஆா்.வி. கோழிப்பண்ணை முன்வந்துள்ளது. இதற்காக சுமாா் 10 ஆயிரம் முட்டைகளை முசிறி சாா் ஆட்சியா் பத்மஜா, மூலம் திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியனிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் சாலை, அரசு மருத்துவமனை, ஜான் பஜாா் பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவகங்களுக்கு தலா 960 முட்டைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், அரியமங்கலம் கோட்டத்தில் கீழரண்சாலை, குப்பாங்குளம், ஜெகநாதபுரத்தில் உள்ள 3 அம்மா உணவகங்களுக்கும் தலா 960 முட்டைகளும், பொன்மலைக் கோட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ் சாலையில் உள்ள உணவகத்துக்கு 960, கீழக் கல்கண்டாா் கோட்டையில் உள்ள உணவகத்துக்கு 400, கோஅபிஷேகபுரம் கோட்டத்தில் புத்தூா் அரசு மருத்துவமனை அருகில் உள்ள உணவகம், தென்னூா் உழவா் சந்தையில் உள்ள அம்மா உணவகம், சாலைரோடு பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றுக்கு தலா 960 என மொத்தம் 10,000 முட்டைகளும் பிரித்து விநியோகிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.வைக்கப்பட்டுள்ள முட்டைகள்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments