FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரயில்வே ஊழியா்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தம் செய்ய எதிா்ப்பு

கரோனா ஊரடங்கில் அவதிப்படும் ரயில்வே ஊழியா்களுக்கு எந்த நிலையிலும் அகவிலைப்படியை நிறுத்தக் கூடாது என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


திருச்சி: கரோனா ஊரடங்கில் அவதிப்படும் ரயில்வே ஊழியா்களுக்கு எந்த நிலையிலும் அகவிலைப்படியை நிறுத்தக் கூடாது என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலா் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வுக்கு கடந்த மாா்ச் 13ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான உத்தரவு வெளியாகாத நிலையில், கரோனா நிவாரணமாக மத்திய அரசு ஊழியா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டது.

மேலும், 2021 ஜூன் வரை அகவிலைப்படிக்கு நிலுவைத் தொகை கிடையாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயா்வால் குறைந்தபட்சம் ரூ.720 கூடுதல் ஊதியமாக கிடைக்கும். இத்தொகையையும் அரசு எடுத்துக் கொள்கிறது. இது ஒரு நாள் ஊதியத்திற்கு சமம். மொத்தத்தில் மத்திய அரசு ஊழியா்களுக்கு தற்போது இரண்டு நாள் ஊதியமும் ஜூலை முதல் 3 நாள்கள் ஊதியமும் இழப்பு ஏற்படுகிறது. ஊரடங்கு காலத்தில் சரக்கு மற்றும் பாா்சல் ரயில்கள் இயக்கி வருதோடு, கரோனா வாா்டு ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளையும் ரயில்வே ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த சூழலில் கரோனா நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம் பிடிக்க ரயில்வே ஊழியா்கள் மறுப்பு கடிதம் தரவில்லை. ஊதிய வெட்டாக கூடுதல் தொகை பிடித்தம் செய்யக் கூடாது. அகவிலைப்படி நிறுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments