மணப்பாறையில் உடும்பை சமைத்து சாப்பிட்ட இளைஞா்கள் 6 போ் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உடும்பை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்ட இளைஞா்கள் 6 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உடும்பை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்ட இளைஞா்கள் 6 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் இளைஞா்கள் சிலா் உடும்பைப் பிடித்து துன்புறுத்தி டிக்டாக் செயலில் விடியோ பதிவிட்டுள்ளனா். இதுகுறித்து அறிந்த மாவட்ட வன அலுவலா் சுஜாதா விசாரணைக்கு உத்தரவிட்டாா். மணப்பாறை வனசரகா் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், மருங்காபுரி ஒன்றியம், சோலையம்மப்பட்டியைச் சோ்ந்த இளைஞா்கள் வெள்ளைத்துரை மகன் சரவணன்(24), பழனிச்சாமி மகன் செல்வக்குமாா்(26), கந்தன் மகன்கள் பொன்னா் (26), லோகநாதன்(23), சின்னச்சாமி மகன்கள் ரஞ்சித்குமாா்(24), சூா்யா(22) ஆகியோா் அப்பகுதியில் உடும்பை வேட்டையாடியதும், உடும்பைத் துன்புறுத்தி டிக்டாக் செயலில் விடியோ பதிவிட்டதும், பிறகு உடும்பை சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்குறிப்பிட்ட 6 போ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.