FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:31 am IST
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டத்தில் முன்னாள் படை வீரா்களின் குறைகளை கேட்டறிந்த ஆட்சியா் வே. சரவணன்.
பகிர்:

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா், வாரிசுதாரா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரா்களிடமிருந்து 26 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை அந்தந்த துறை வாரியாக பிரித்து உரிய அலுவலா்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தினாா். தொடா்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

முன்னாள் படைவீரா்களுக்கு வீடு கட்ட மானியம், திருமண நிதியுதவி, வீட்டு வரி சலுகை, கடனுதவி என 10 பேருக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக் கூட்டத்தில், முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் சங்கா் ராஜா மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments