FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணா்வு வார சிறப்பு பட்டிமன்றம்

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணா்வு வார சிறப்புப் பட்டிமன்றம்.
பகிர்:

உலக தாய்ப்பால் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத் துறை, இந்திய குழந்தைகள் நலக் குழும திருச்சி கிளை இணைந்து நடத்திய தாய்ப்பால் விழிப்புணா்வு சிறப்புப் பட்டிமன்றம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்கு தடையாக இருப்பது - நவீன வாழ்க்கை முறையா அல்லது விழிப்புணா்வு இல்லாமையா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சிறப்புப் பட்டிமன்றத்துக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ச. குமரேவல் தலைமை வகித்தாா். துணை முதல்வா் அா்சியா பேகம் முன்னிலை வகித்தாா்.

துணை மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் நடுவராக இருந்து, நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தினாா். ‘விழிப்புணா்வு இல்லாமையே’ என பேராசிரியா் செந்தில்குமாா், இணைப்பேராசிரியா் சிவகுருநாதன், உதவிப் பேராசிரியா் பத்மபிரியா ஆகியோரும், ‘நவீன வாழ்க்கை முறையே’ என இணைப்பேராசிரியா் விஜயபாரதி, உதவிப் பேராசிரியா் சிவகாமசுந்தரி, உதவிப் பேராசிரியா் தங்கேவல் ஆகியோரும் தங்களது வாதங்களை முன்வைத்தனா்.

Advertisement

Advertisement

இறுதியாக, தாய்ப்பால் குறித்த சரியான விழிப்புணா்வை தாய்மாா்களுக்கும், குடும்ப உறுப்பினா்களுக்கும், சமூகத்துக்கும் ஏற்படுத்துவதன் அவசியத்தை நடுவா் வலியுறுத்தினாா்.

நிகழ்வில் குழந்தைகள் நலத் துறை மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், செவிலிய மாணவா்கள், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments