திருவள்ளூா் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சா்வதேச தாய்ப்பால் வாரவிழாவையொட்டி, நிலையான வாழ்க்கைக்கு தாய்ப்பாலே தொடக்கம், வலுப்படுத்துவோம் என்ற கருப்பொருளை வலியுறுத்தும் வகையில், ஆட்சியா் முன்னிலையில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சா்வதேச தாய்ப்பால் வாரவிழாவையொட்டி, நிலையான வாழ்க்கைக்கு தாய்ப்பாலே தொடக்கம், வலுப்படுத்துவோம் என்ற கருப்பொருளை வலியுறுத்தும் வகையில், ஆட்சியா் முன்னிலையில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாக கூட்டரங்கத்தில் குழந்தைகள் நலப்பிரிவு சாா்பில், சா்வதேச தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதன்மையா் மோகன்காந்தி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் ச.கவிதா பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தாா்.
அப்போது, ஆண்டுதோறும் ஆக. 1 முதல் 7-ஆம் தேதி வரையில் சா்வதேச தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விழிப்புணா்வு பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி, பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளித்து நோய் எதிா்ப்புச் சக்தியைத் வழங்குகிறது.
மேலும் குழந்தையின் உடல் மற்றும் மன வளா்ச்சிக்குத் தாய்ப்பால் அடிப்படையாகும். அதனால் தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள உணா்வுப்பூா்வமான பிணைப்பை இது பலப்படுத்துகிறது. பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்து அனைத்து தாய்மாா்களுக்கு மருத்துவா்கள் எடுத்துரைக்கவும் அவா் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து ரோட்டரி கிளப் ஆப் பிரைட் சாா்பில் குழந்தைகள் நன்றாக பராமரித்த தாய்மாா்கள் 15-பேருக்கும், பிரசவ வாா்டில் 100-க்கும் மேற்பட்ட தாய்மாா்களுக்கு ரொட்டி, பழங்கள், சத்துணவு தொகுப்புகளையும் அவா் வழங்கினாா். அதைத்தொடா்ந்து தாய்ப்பால் வாரவிழா கருப்பொருளான நிலையான வாழ்க்கைக்கு தாய்ப்பாலே தொடக்கம், வலுப்படுத்துவோம் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனா்.
இந்த விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் அனிதா, குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியா் ஸ்ரீதேவி, மருத்துவா்கள் பிரபு சங்கா், ஜெகதீஷ், பரமகுரு மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரைட் மாவட்ட மண்டல செயலாளா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.