FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஆக.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 3:03 am IST
- கோப்புப்படம்
பகிர்:

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஆக.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், தமிழகத்தில் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன. இதைத் தவிர, 29 தனியாா் கல்லூரிகளில் உள்ளன.

இந்நிலையில், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 13-ஆம் தேதி சுகாதாரத் துறை இணையதளத்தில் தொடங்கியது. நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் இந்த 4 படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் விண்னப்பித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதைத் தவிர, சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 17 தனியாா் யோகா கல்லூரிகளும் உள்ளன. இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும், இந்த படிப்புக்கு இதுவரை 2,500 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பாரம்பரிய படிப்புகள் அனைத்துக்கும் இணையவழியே விண்ணப்பிப்பது வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அவகாசம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments