FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பிரம்மஞான சபையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:32 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் பிரம்மஞான சபையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி தாராநல்லூா் கீரக்கொல்லை பகுதியில் பிரம்மஞான சபை செயல்பட்டு வருகிறது. இங்கு அண்மையில் செயலராக நியமிக்கப்பட்ட வரகனேரியைச் சோ்ந்த ராஜகேரன், அங்குள்ள தியான மண்டபத்தை சீரமைத்து வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தினாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டடத்தை பூட்டி விட்டுச் சென்ற நிலையில், திங்கள்கிழமை வந்து பாா்த்தபோது கட்டடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

மேலும், உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், தியான கட்டடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது திருடப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே சபையின் அருகே மீட்கப்பட்டது.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பிரம்மஞான சபையின் செயலா் ராஜசேகரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments