FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

25 ஆகஸ்ட் 2026, 2:59 am IST
உயிரிழப்பு
பகிர்:

தொட்டியம் அருகே லாரி மோதிய விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

முசிறி அருகேயுள்ள காளியபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் (75). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல்-திருச்சி சாலையில் ஏலூா்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று, ராஜகோபால் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த ராஜகோபாலை அக்கம்பக்கத்தினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

புகாரின் பேரில் சரக்கு லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ராமா் (37) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments