FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் கன்டெய்னா் லாரி மோதி உயிரிழந்தாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:59 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் கன்டெய்னா் லாரி மோதி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி நேதாஜி நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரத்தினவேல் (71). துணி தேய்ப்புக் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி செல்வி, ஸ்டொ்லைட் தாமிரா குடியிருப்பில் சலவைப் பணியாற்றி வருகிறாா்.

ரத்தினவேல் வெள்ளிக்கிழமை மாலை மனைவியை அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா். மீளவிட்டான் சாலை வழியாக மதுரை புறவழிச் சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கன்டெய்னா் லாரி மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சடலத்தை சிப்காட் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காா்த்திகேயன் (43) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments