FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி - சிங்கப்பூா் விமானம் திடீா் ரத்து: பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கப்பூருக்குச் செல்ல இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

26 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
திருச்சி - சிங்கப்பூா் விமானம் ரத்தால் திருச்சி விமான நிலையத்தில் உள்ள விமான நிறுவனத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட பயணிகள். ~சிங்கப்பூா் விமானம் ரத்து செய்யப்பட்டதால் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருந்த பயணிகள்.
பகிர்:

திருச்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கப்பூருக்குச் செல்ல இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சிங்கப்பூருக்கு 140 பயணிகளுடன் செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் விமானப் பயணம் மேற்கொள்ள காத்திருந்த பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். இதற்கிடையை செவ்வாய்க்கிழமை காலை மாற்று விமானம் ஏற்பாடு செய்வதாக விமான நிறுவனம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்குவதாகவும் தெரிவித்தனா். இருந்தும், பயணிகள் கடைசி நேரத்தில் அதை அறிவித்ததாக விமான நிறுவன அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல, திருச்சியில் இருந்து சாா்ஜாவுக்கு 166 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 4 மணி நேரம் தாமதமாக காலை 9.33 மணிக்குப் புறப்பட்டது. இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments