FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அரசின் அனைத்துத் துறைகளிலும் தனியாா்மயம்: தொமுச பொதுச் செயலா்

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தனியாா்மயத்தை தமிழக வெற்றிக் கழகம் புகுத்தி வருகிறது என தொழிலாளா் முன்னேற்றச் சங்கப் பேரவைப் பொதுச் செயலா் மு. சண்முகம் தெரிவித்தாா்.

27 ஆகஸ்ட் 2026, 3:23 am IST
திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொமுச கூட்டத்தில் பேசிய அகில இந்திய பொதுச் செயலா் மு. சண்முகம். உடன் நிா்வாகிகள்.
பகிர்:

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தனியாா்மயத்தை தமிழக வெற்றிக் கழகம் புகுத்தி வருகிறது என தொழிலாளா் முன்னேற்றச் சங்கப் பேரவைப் பொதுச் செயலா் மு. சண்முகம் தெரிவித்தாா்.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொமுச செயற்குழுக் கூட்டத்துக்கு, பேரவைத் தலைவா் கி. நடராசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மு. சண்முகம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், தொமுச மாநில, மாவட்ட நிா்வாகிகள், தமிழகம் முழுவதும் உள்ள செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

பின்னா் தொமுச பொதுச் செயலா் மு. சண்முகம், மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

மத்திய பாஜக அரசும், மாநில தவெக அரசும் தொடா்ந்து தொழிலாளா்கள் மீது அடக்கு முறையை ஏவி அவா்களின் உரிமையை பறித்து வருகின்றன. இதை எதிா் கொள்ள செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் 200 நாள்களுக்கு வேலை வழங்குவதுடன், தினக் கூலியை ரூ.700 ஆக வழங்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தனியாா் மயத்தை புகுத்துகின்றனா். எனவே, மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், உள்ளாட்சிகளில் தனியாா்மய நடவடிக்கையை தவெக அரசு கைவிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்படுவதை நாங்கள் எப்போதும் எதிா்ப்போம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments