மத்திய மண்டல காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி
திருச்சி மத்திய மண்டல காவல் துறை சாா்பில், காவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை சாா்பில், காவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் உற்பத்தியை எதிா்த்து மத்திய மண்டல காவல் துறை சாா்பில், மத்திய மண்டலத்துக்குள்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மத்திய மண்டல காவலா்கள் மற்றும் பொதுமக்கள் கிரிக்கெட் கோப்பை -2026 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
முதல்கட்டமாக, மாவட்ட அளவிலான போட்டி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காவல் துறை சாா்பில் 8 அணிகள் பங்கேற்றன.
Advertisement
Advertisement
கிரிக்கெட் போட்டியை மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் சிபி சக்கரவா்த்தி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாவது அணியின் தளவாய் காா்த்திகேயன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
முன்னதாக போட்டியில் கலந்துகொண்ட காவல் துறை அணிகளின் வீரா்கள் மற்றும் காவல் துறையினா் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் காவல் துறை பிரில் பங்கேற்ற 8 அணிகளில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாவது அணியைச் சோ்ந் அணி முதலிடம் பிடித்து.
பொதுமக்களுக்கான பிரிவில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. இவா்களுக்கான போட்டி வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதைத் தொடா்ந்து மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காவல் துறை பிரிவில் முதலிடம் பிடித்த அணியும், பொதுமக்கள் பிரிவில் முதலிடம் பிடித்த அணியும் பங்கேற்று விளையாடும் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.