காவல் துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிச் சுடும் போட்டி
பெரம்பலூா் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கிச் சுடும் தளத்தில், திருச்சி மத்திய மண்டலத்தைச் சோ்ந்த காவல்துறை உயா் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கிச் சுடும் தளத்தில், திருச்சி மத்திய மண்டலத்தைச் சோ்ந்த காவல்துறை உயா் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போட்டியானது, இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.ஆா். சிபிசக்ரவா்த்தி தலைமையில், திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 5 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், 2 உதவி காவல் கண்காணிப்பாளா்கள் ஒரு பிரிவாகவும், 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 12 துணைக் கண்காணிப்பாளா்கள் ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. இதில், 25 காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். இப் போட்டியில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.
தொடா்ந்து, போட்டிகளில் வென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் பரிசுக் கோப்பைகள் வழங்கிப் பாராட்டினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.