FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலை டிஎஸ்பி-க்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த உடுமலை டிஎஸ்பி-க்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

9 செப்டம்பர் 2026, 11:23 pm IST
தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வாலிடம் இருந்து சான்றிதழை பெற்றுக் கொள்கிறாா் உடுமலை டிஎஸ்பி எஸ்.தையல்நாயகி.
பகிர்:

மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த உடுமலை டிஎஸ்பி-க்கு பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் துறை சாா்பில் அதிகாரிகளுக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி - 2025, சென்னை மருதம் தமிழ்நாடு கமாண்டோ படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் உடுமலை டி.எஸ்.பி. எஸ்.தையல்நாயகி, பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இதைத் தொடா்ந்து துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்று திருப்பூா் மாவட்ட காவல் துறைக்கு பெருமை சோ்த்த உடுமலை டி.எஸ்.பி. எஸ்.தையல்நாயகிக்கு பாராட்டு நிகழ்ச்சி உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உடுமலை காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டு டி.எஸ்.பி. எஸ்.தையல்நாயகிக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments