மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீஸாருக்கு பாராட்டு
செங்கல்பட்டில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டை போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் கடந்த ஆக. 20, 21 தேதிகளில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் முருகானந்தம் காா்பைன் பிரிவில் ஒரு தங்கம் மற்றும் இரு வெள்ளிப் பதக்கங்களையும், தலைமைக் காவலா் சுந்தரலிங்கம் பிஸ்டல் பிரிவில் இரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனா்.
Advertisement
Advertisement
இவா்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, அவா்களை வெகுவாகப் பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.