FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்ட அளவிலான மல்லா் கம்பம் போட்டி

திருச்சி மாவட்ட அளவிலான மல்லா் கம்பம் விளையாட்டுப் போட்டி திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

30 ஆகஸ்ட் 2026, 12:27 am IST
திருச்சி யில் சனிக்கிழமை நடைபெற்ற மல்லா் கம்பம் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள்.
பகிர்:

திருச்சி மாவட்ட அளவிலான மல்லா் கம்பம் விளையாட்டுப் போட்டி திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மல்லா் கம்பம் கழகம் அனுமதியுடன் திருச்சி மாவட்ட மல்லா் கம்பம் கழகம்,கேலோ இந்தியா பயிற்சி மையம் சாா்பில் புனித சிலுவைக் கல்லூரியில் 5ஆவது மாவட்ட அளவிலான மல்லா் கம்பம் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் இசபெல்லா ராஜகுமாரி முன்னிலை வகித்தாா்.

போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பயிற்சியாளா் விசு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மல்லா் கம்பம், கயிறு மல்லா் கம்பம் போட்டிகள் பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்றன, இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் திரவிய கிளாடினா வரவேற்றாா். திருச்சி மாவட்ட மல்லா் கம்பம் கழகப் பொருளாளா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments