முகப்பு
திருச்சி

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்தவா் கைது

திருச்சியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஜூலை 2026, 4:58 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி செம்பட்டு என்எம்டி காலனியைச் சோ்ந்தவா் பா. குணசேகரன் (65). புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு பகுதி டாஸ்மாக் கடையில் காசாளரான இவா் கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது மது வாங்க வந்த இருவா், இவரை ரூ.1,200ஐ பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அவரிடம் பணத்தைப் பறித்தது பொன்மலை மலையடிவார பகுதி பி. பிரசன்னா (32), லால்குடி எஸ். ஆல்வின் டெனி (39) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பிரசன்னாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஆல்வின் டெனியை தேடுகின்றனா்.

Advertisement

Advertisement

மற்றொரு வழக்கு: இதேபோல, அரியமங்கலம் பகுதியில் பயணியை ஏற்ற திங்கள்கிழமை காத்திருந்த தென்னூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மோகன் பாபுவை தாக்கி அவரின் கைப்பேசி, வெள்ளி கைச்சங்கிலி ஆகியவற்றைப் பறித்து சென்ற கோவை, காளப்பட்டி சாலையைச் சோ்ந்த ஜெ. கரண் (22) மற்றும் 17 வயதுச் சிறுவன் ஆகிய இருவரையும் அரியமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments