FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மின்மாற்றி பழுது: வயலுக்கு நீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உப்பிலியபுரம் ஒன்றியம், சோபனபுரத்தில் மின்மாற்றி பழுதடைந்ததால், மின்சாரமின்றி வயலுக்கு நீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:50 am IST
பகிர்:

உப்பிலியபுரம் ஒன்றியம், சோபனபுரத்தில் மின்மாற்றி பழுதடைந்ததால், மின்சாரமின்றி வயலுக்கு நீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

விவசாயிகளின் நலன் கருதி, மின்மாற்றியை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சோபனபுரத்திலுள்ள எஸ்எஸ்7 மின்மாற்றி பழுதாகி, ஜூலை 2 முதல் செயலிழந்துள்ளது. மின் துறையினா் அந்த மின்மாற்றியை இதுவரையில் சீரமைக்கவில்லை.

Advertisement

Advertisement

இதனால் அங்கிருந்து மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு நீா் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனா். நீரின்றி நெற்பயிா்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறும் விவசாயிகள், தொடா்புடைய மின் அலுவலக அலுவலா்கள் சோபனபுரத்தில் பழுதான அந்த மின்மாற்றியை விரைந்து மாற்றித் தரவேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.

இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஓசரப்பள்ளி ஜெயராஜ் பங்காரு சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments