FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றபோது மின் கம்பத்திலிருந்து அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூலை 2026, 11:38 pm IST
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ராமு.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றபோது மின் கம்பத்திலிருந்து அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகிலுள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ப.ராமு (41), விவசாயி.

இவா், வெள்ளிக்கழமை காலை அவரது வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றாராம். அங்கு கரும்பு வயலின் அருகில் மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. அதனைக் கவனிக்காமல் சென்ற ராமு மின்கம்பியை காலால் மிதித்து போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாராம்.

Advertisement

Advertisement

அப்போது ராமுவுடன் சென்ற அவரது மகன் ஸ்ரீதா் (10) அதனைக் கண்டு கூச்சலிட்டுள்ளாா். இதையடுத்து சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று மின் இணைப்பை துண்டித்து, ராமுவின் சடலத்தை மீட்டனா்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments