FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்!

திருச்சி வந்த பயணியிடம் ரூ.2 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
பறிமுதல்
பகிர்:

மலிந்தோ விமானத்தில் திருச்சி வந்த பயணியிடம் ரூ.2 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த மலிந்தோ விமானத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, எஸ். சுவைபு என்ற பயணி, தனது உடமையில் ரூ.2 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுவைபுவை கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments